Saturday, June 20, 2009

குமரி புகழ்


* தமிழ்நாட்டில் மூன்றாவது வளர்ந்த மாவட்டம் குமரி மாவட்டம்.
* சுதந்திரத்துக்குப்பின் கேரள மாநிலத்தோடு இணைந்திருந்த குமரி மாவட்டம் ,பின்னர் மக்களின் தொடர் போராட்டங்களால் 1956-ல் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.எங்கள் குமரி மாவட்டம் குறித்து நானறிந்த சில தகவல் துளிகள்.
* இந்திய திரு நாட்டின் தெற்கு முனை - முக்கடலும் சங்கமிக்கும் குமரிமுனை அமைந்துள்ள மாவட்டம்
* கேரளத்தின் ஒரு பகுதியாக இருந்து ,பெரும்பான்மைத்தமிழர்கள் மார்ஷல் நேசமணி தலைமையில் தாய்த்தமிழகத்தோடு இணைக்கக்கோரி மாபெரும் இயக்கம் நடத்தி,போராடி பின்னர் தமிழகத்தோடு இணைக்கப்பட்ட மாவட்டம்.
* தமிழகத்தில் எழுத்தறிவில் முதலிடம் வகிக்கும் மாவட்டம்.
* பரப்பளவில் குறைந்ததெனினும் ,மலைகளும் கடலும் சூழ்ந்த இயற்கை எழில் கொஞ்சும் ,தென்னை ,வாழை நிறைந்த மாவட்டம்.
* தமிழகத்தில் கிறிஸ்தவர்கள் அதிக சதவீதத்தில் இருக்கும் மாவட்டம் (ஆனால் பா.ஜ.க-வின் சட்டமன்ற கணக்கை தொடங்கி வைத்த மாவட்டம்)
* 'ஆசிரியர் மாவட்டம்' என்று சொல்லுமளவுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக ஆசிரியர்களை அனுப்பி வைத்த மாவட்டம்.
* இந்தியாவின் உயர்தர ரப்பர் விளையும் மாவட்டம்
* கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை , 'தமிழ்த்தாய் வாழ்த்து' தந்த மனோன்மனியம் சுந்தரனார் பிறந்த மாவட்டம் (வள்ளுவரும் இங்கே பிறந்ததாக ஒரு சாரார் சொல்கின்றனர்)
* கலைவாணர் N.S.கிருஷ்ணன் ,திரையிசைத் திலகம் K.V.மகாதேவன் ,அவ்வை சண்முகம் போன்ற கலையுலக ஜாம்பவான்களின் சொந்த மாவட்டம்.
* சொந்த ஊரில் தோற்கடிக்கப்பட்ட பெருந்தலைவர் காமராஜரை ,உச்சி முகர்ந்து பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைத்த பெருந்தலைவரின் செல்ல மாவட்டம்.ஜீவா பிறந்த மாவட்டம்.
* சமீபத்தில் இந்தியாவிலேயே சுத்தமான பஞ்சாயத்து யூனியன் (மேல்ப்புறம்) என்ற ஜனாதிபதி விருதினை தட்டிச்சென்று ,தமிழகத்துக்கு பெருமை சேர்த்த மாவட்டம்.
* இந்தியாவிலேயே முதல் பெண் பேருந்து ஓட்டுனரை தந்த மாவட்டம் .
* மாநில கட்சிகளுக்கு இணையாக தேசிய கட்சிகள் (காங்கிரஸ் ,பா,ஜ,க ,கம்யூனிஸ்ட்) செல்வாக்கை இன்னும் தக்கவைத்திருக்கும் மாவட்டம் . ஆனால் எந்த கட்சிக்கும் கோட்டையாக இல்லாத மாவட்டம் .திராவிட கட்சிகளுக்கு சோதனை தந்த மாவட்டம் .அதனால் 'நெல்லை எங்கள் எல்லை! குமரி எங்கள் தொல்லை!" என்று கலைஞரை புலம்ப விட்ட மாவட்டம்.
* தமிழகத்தில் அதிகமாக காற்றலை மூலம் மின் உற்பத்தி நடைபெறும் மாவட்டம்.

மனதில் என்ன ரகசியம்

Thursday, June 18, 2009

ஒரு சிறிய காதல் சோக கதை

( ஒரு இணையதளத்தில் நான் ரசித்த சிறிய சோகமான காதல் கதையை இங்கு பதிவிடுகின்றேன். )

தான் குருடாகிப்போனதால் தன்னையே வெறுக்கும் ஒரு கண்தெரியாத பெண் எல்லாவற்றையம் வெறுக்க ஆரம்பித்தாள் தன்னை நேசிக்கின்ற தனது காதலனைத்தவிர.

"எனக்கு பார்வை கிடைத்தால்தான் உன்னை திருமணம் செய்துகொள்வேன்" என்று தன்னை உயிருக்குயிராய் நேசிக்கும் தன் காதலனிடம் அவள் கூறுகிறாள்

ஒருநாள் அவளுக்கு பார்வை கிடைக்கின்ற நாள் நெருங்கியது. யாரோ அவளுக்கு கண்களை தானம் செய்து அவள் பார்வை கிடைக்க வழிசெய்தார்கள்.

அவள் கண்களைத்திறந்தாள். உலகத்தைப் பார்த்தாள். தனக்கு உலகமான தன்னை நேசித்த காதலைனைப்பார்த்தாள். அதிர்ச்சியடைந்தாள். ஆம் அவளுடைய காதலனுக்கும் இரு கண்களும் இல்லை.

காதலன் கேட்டான். "இப்பொழுது நீ உலகத்தைப் பார்க்கின்றாய் ..சொல் என்னை திருமணம் செய்து கொள்கிறாயா?" என்று

"கண்தெரியாத உன்னை என்னால் திருமணம் செய்ய முடியாது" என்று அவள் அவனை மறுத்துவிட்டாள்.

அந்த காதலனும் கண்ணீரோடு ,

"என்னைத்தான் வெறுத்துவிட்டாய் என் கண்களையாவது நன்றாக கவனித்துக்கொள்" என்று சொல்லிவிட்டு சென்றுகொண்டிருந்தான்.

கங்கையில் ஒரு பெண்.

Sunday, June 14, 2009

நாஞ்சில் நாட்டு அவியல்

தேவையான பொருட்கள்:

* கத்தரிக்காய் - 2
* முருங்கக்காய் - 1
* சேனைக்கிழங்கு - ஒன்று சிறியது
* கொத்தவரங்காய் - 50 கிராம்
* வெள்ளரிக்காய் - ஒரு துண்டு
* தடியங்காய் - ஒரு துண்டு
* மாங்காய் - 1
* புளி, தயிர் - கொஞ்சம்
* தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* ------------------------
* அரைக்க:
* தேங்காய் - அரை மூடி
* பச்சை மிளகாய் - 10 நம்பர்
* சீரகம் - அரைத் தேக்கரண்டி
* சின்ன வெங்காயம் - 2


* காய்கறிகளை நன்றாக கழுவி நீளமாக வெட்டிக்கொள்ளவும். ஒரே அளவாக வெட்டிக் கொள்ளவும்.
* நறுக்கின காய்களை ஒரு அகன்ற பாத்திரத்தில் போட்டு கறிவேப்பிலை சிறிது உப்பு போட்டு, தண்ணீர் கால் கப் அல்லது தயிர் அல்லது புளி போட்டு வேகவிடவும்.
* அரைக்க கொடுத்துள்ளவைகளை தேங்காயுடன் அரைக்கவும். விழுதாக அரைக்காமல், சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.
* இப்பொழுது காய்கள் நன்றாக வெந்து இருக்கும். அதனுடன் அரைத்தவற்றையும் கலந்து விடவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
* ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்னெய் சேர்க்கவும். கெட்டியாக தண்ணீர் இல்லாமல் ஆனவுடன் இறக்கிவிடவும்.
* சுவையான நாஞ்சில் நாட்டு அவியல் ரெடி.

Wednesday, June 10, 2009

தென் குமரி

கன்னியாகுமரி
இந்தியாவின் தென்கோடி முனை. தமிழகத்திற்கு தெற்கு எல்லையாகத் திகழும் நகரம். வடவேங்கடம் முதல் தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகம். ஆதித தமிழகத்தின் ஆவண நகரம். அரபிக்கடல், வங்காளவிரிகுடா, இந்தியப் பெருங்கடல் என முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி, சுற்றுலாத் தலங்களில் கவனத்திற்குரியது. இங்கு காணக் கிடைக்கும் சூரிய உதயமும், அஸ்தமனமும் வண்ணத்திருவிழா. வானம் வாரியிறைக்கும் வர்ண ஜாலம் அது. பல வண்ண மணல் நிரம்பிய குமரி கடற்கரை காணக் காண இன்பமே.
சிதரால்
மலைமீது அமைந்துள்ள திருக்கோயில். சமணமத தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் நிறைந்த அழகுக் கோயில். இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையால் பராமரிக்கப்படும் இக்கோயிலை தரிசிக்க கன்னியாகுமரியிலிருந்து 45 கி.மீ. செல்ல வேண்டும்.
காந்தி நினைவாலயம்
மகாத்மா காந்தியடிகளின் அஸ்தி பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள நினைவாலயம். முக்கடல் சங்கமத்தில் மூழ்கி நீராடுவதற்கு முன் தேசத் தந்தைக்கு இறுதி மரியாதை செல்லுத்துவதற்கு வசதியாக இது அமைக்கப்பட்டுள்ளது. மகாத்மா பிறந்த அக்டோபர் 2 ஆம் நாள் மட்டும் ஒரு குறுகிய துளையின் வழியாக அஸ்தி கலசத்தின் மீது சூரியக் கதிர்கள் விழும்படி அமைக்கப்பட்டுள்ளது. கடலில் கால் நனைக்கும் முன் அகிம்சை அண்ணலை ஞாபகம் கொள்ளுங்கள்.
அரசு அருங்காட்சியகம்
தென்னிந்திய கோயில்களின் கைவினை கலைபொருட்கள் தொகுத்து வைக்கப்பட்டுள்ள காட்சியகம். கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. குமரிக்குச் செல்லும் பயணிகள் இங்கும் ஒருமுறை சென்று வாருங்கள். புதியதொரு அனுபவத்தை உணர்வீர்கள்.
குகநாதசுவாமி கோயில்
தென்கோடி முனையிலும் சோழர்கள் கால்தடம் பதித்துள்ளார்கள் என்பதற்கு இக்கோயில் ஒரு சான்றாகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராஜராஜசோழன் கட்டிய கோயில் என்று கருதப்படுகிறது. சோழர்களின் கட்டடக் கலை பாணியில் மிளிரும் குருநாதசுவாமி கோயிலிலுள்ள பதினாறு கல்வெட்டுகள் அதன் வரலாறைச் சொல்கின்றன. இக்கோயில் குமரி ரயில் நிலையம் அருகே உள்ளது. நேரம் காலை 6-11.15 மாலை 5-8.15 மணி வரை.
காமராசர் நினைவாலயம்
எளிய குடும்பத்தில் பிறந்து, முதல்வராக உயர்ந்தவர் பெருந்தலைவர் காமராசர். மதிய உணவுத் திட்டத்தின் மூலம் ஏழை, எளிய பள்ளிக் குழந்தைகளின் வாழ்வில் கல்வி விளக்கை ஏற்றியவர் கர்மவீரர். படிக்காத மேதை என்று தமிழக மக்களால் புகழப்பட்ட மக்கள் தலைவர் காமராசரின் நினைவாலயம். இது 2000 அக்டோபர் 2 ஆம் தேதி திறந்து வைக்கபட்டது.
கேரளபுரம்
விநாயகர் கோயில் இல்லாத ஊர் இருக்கிறதா? இதுவொரு புதிரான விநாயகர். தக்கலை அருகேயுள்ள கேரளபுரத்து விநாயகர் கோயில் பிரபலமானது. இங்குள்ள விநாயகர் சிலை ஆறுமாதம் கறுப்பாகவும் ஆறு மாதம் வெள்ளையாகவும் தெரிவார். நேரில் சென்றால் புதிரின் உண்மை புரியும்.
ஜீவா மணி மண்டபம்
ஜீவா எனப்படும் ப.ஜீவானந்தம் எளிமையான தலைவர். தமிழகத்தில் மார்க்சிய இயக்கம் வளரக் காரணமாக இருந்த மார்க்சிய இயக்க முன்னோடி. தாமரை, ஜனசக்தி போன்ற பத்திரிகைகளின் வாயிலாகப் பொதுவுடமை. கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்றவர். தமிழ் இலக்கியத்தில் புலமை மிக்கவர். சென்னை வண்ணாரப்பேட்டையின் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர். சிறந்த நாடாளுமன்றவாதி. இந்த அரிய தலைவரை பெருமைப்படுத்தும் விதமாக ஏப்ரல் 18, 1998 இல் நாகர்கோயிலில் இந்த நினைவாலயம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு அவரது உருவச்சிலை வாழ்க்கையைச் சித்திரிக்கும் நிழற்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
குமரியம்மன் கோயில்
கடலில் நீராடும் துறை அருகே ஓர் அழகிய சித்திரம்போல அமையப் பெற்றிருக்கிறது குமரியம்மன் கோயில். இந்த அம்மனின் பெயருக்குக் காரணம் இருக்கிறது. குமரி அம்மன் சிவனைத் திருமணம் செய்துகொள்ள முடியாத நிலையில் காலம் முழுதும் கன்னியாகவே வாழ ஒரு நோன்பை மேற்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இதுவே கன்னியாகுமரி என்று பெயர் வரக்காரணம் என்கிறார்கள். குமரியம்மனின் வைர முக்குத்தியின் ஜொலிப்பை கடலில் இருந்தும் கூடப் பார்க்கலாம் என்று சொல்கிறார்கள். தொலைபேசி - 04652 - 246223.
அரசு பழப்பண்ணை
பழங்கள் செழிப்பின் அடையாளம். பழங்களை கூடையில் பார்ப்பதைவிட தோட்டத்தில் பார்ப்பது தனியொரு அற்புத அனுபவம். இந்த அரசு பழப்பண்ணையில் பல்வேறு பழ வகைகள், நூற்றுக்கணக்கான செடி வகைகள் மற்றும் பல நறுமண மரங்களைக் காண முடியும். கன்னியாகுமரியிலிருந்து நாகர்கோயில் சாலையில் 2 கி.மீ. சென்றால் பழப்பண்ணையை அடையலாம். நேரம் காலை 9-11 மதியம் 1-3 மணி வரை. விடுமுறை சனி ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள்.
மாத்தூர் தொங்குபாலம்
ஓர் ஓவியக் கோட்டினைப்போலத் தோன்றும் இது ஆசியாவின் மிக நீளமான குறுக்குப் பாலம். 115 அடி உயரமும் 1 கி.மீ. நீளமும் உடையது. அப்பாடா! நேரில் பார்த்தால் நிச்சயம் அசந்து போவீர்கள். திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்தில் அருவிக்கரை வருவாய் கிராமத்தைச் சேர்ந்த மாத்தூர் என்ற இடத்தில் இருக்கிறது தொங்கு பாலம். பரளியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட இப்பாலம் வழியே பட்டணம்கல் மலையிலிருந்து இன்னொரு பக்கத்திற்கு நீர் எடுத்துச் செல்லப்படுகிறது. விளவங்கோடு கல்குளம் பகுதிகளின் விவசாய வளர்ச்சிக்காக அப்போதைய தமிழக முதலமைச்சர் காமராசர் முயற்சியின் கீழ் கட்டப்பட்ட இந்தப் பாலம் ஒரு சுற்றுலாத் தலமாக மாறியிருக்கிறது. இங்கு குழந்தைகள் பூங்காவும் நீராடும் துறையும் இருக்கின்றன.
மருத்துவ மலை
மலைகளில் காற்றும் மழையும் உலவுகின்றன. அதோடு பின்னணிக் கதைகளும் இருக்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக இம்மலை மருத்துவ மலை மருந்து வாழும் மலை என்று அழைக்கப்படுகிறது இது மருத்துவ மூலிகைகள் விளையும் பண்ணையாக இருக்கிறது. ராமனின் தம்பி லட்சுமணன் போரில் அடிபட்டு காயமடைந்தபோது அனுமன் அக்காயத்தை குணப்படுத்துவதற்காக மகேந்திரபுரியிலிருந்து இலங்கைக்கு கொண்டு சென்ற சஞ்சீவி மலையின் ஒரு துண்டு இங்கு விழுந்து மருத்துவ மலையாக நிற்கிறது என்று போகிறது கதை. இம்மலையின் உச்சி 800 அடி. இது நாகர்கோயிலிருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ளது.
முக்கூடல்
முக்கடல் சங்கமித்தால் என்ன? நாகர்கோவில் நகராட்சிக்கு குடிநீரை முக்கூடல்தான் வழங்குகிறது. இந்த அணையை கட்டியவர் சித்திரை மஹாராஜா. சுசீந்திரம், கன்னியாகுமரி நகராட்சிகளுக்கும் தண்ணீர் தாகத்தை முக்கூடல்தான் தணிக்கிறது. சுற்றிப் பார்த்து மகிழ சிறந்த இடம். கூட்டமாகச் சென்று குதூகலித்து வாருங்கள்.
முருகன் குன்றம்
மனித சஞ்சாரமற்ற ஓர் அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள் உண்மையா? அப்படியானால் செல்ல வேண்டிய இடம் முருகன் குன்றம். வெயில் பொழுதுகளிலும் நிலாப் பொழுதுகளிலும் ஆளரவமற்ற அமைதி குடியிருக்கும் குன்றம் இது. சித்ரா பௌர்ணமியன்று முருகன் குன்றம் கோடியழகு. இங்கு செல்ல கன்னியாகுமரியிலிருந்து 2 கி.மீ. பயணிக்க வேண்டும். சம்மதம் தானே?
முட்டம்
கடல் உரசும் கரைகள்; அலை புரளும் கடல், ஒரு தனித்துவமான கடலோர கிராமம் முட்டம். அப்படியே அமைதியாக நேரம் போவது தெரியாமல் மணற்பரப்பில் அமர்ந்துவிடலாம். என்னவொரு அழகு. சொல்லில் சிக்காத காட்சிகள் ஏராளம். நம்மைக் கண்சிமிட்டி அழைக்கும் கலங்கரை விளக்கம் இங்குண்டு. கன்னியாகுமரியிலிருந்து முட்டம் கிராமம் பார்க்க 40 கி.மீ. செல்லமாட்டீர்களா என்ன.?
நாகர்கோவில்
நாகராஜா கோயில் அமைந்த நகரம். கன்னியாகுமரி மாவட்டத் தலைநகரம் இது. மிதமான பருவநிலை நிலவும் நகரம். நாகராஜா கோயிலின் தூண்களில் தீர்த்தங்கரர், மகாவீரர் மற்றும் பர்சவநாதர் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. இத்திருக்கோயிலின் நுழைவாயில் சீன புத்த விகாரக் கட்டக் கலையின் பாதிப்பைக் கொண்டுள்ளது. நாகர்கோயிலில் பேசப்படும் தமிழ் வித்தியாசமானது. ஆதித்தமிழும் இன்றைய மலையாளமும் கலந்து பேசப்படும். ஆனால் அடிப்படையில் அது தமிழ் மொழியே.
பத்மநாபபுரம் அரண்மனை
கன்னியாகுமரி செல்பவர்கள் பட்டியலில் பத்மநாபபுரம் அரண்மனை முதலிடத்தில் இருக்கும். திருவிதாங்கூரை ஆட்சி செய்தவர்களின் பழமை வாய்ந்த அரண்மனை. இது திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக கி.பி. 1798 வரை திகழ்ந்தது. உள்பக்கத்தில் மட்டும் 6 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட பிரமாண்ட அரண்மனையில் போர்த்தளவாடங்கள் உட்பட பலவகையான பழங்காலப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள ராமஸ்வாமி ஆலயத்தில் இராமாயண இதிகாசத்திலிருந்து பல காட்சிகள் 45 பிரிவுகளாகப் பொறிக்கப்பட்டுள்ளன. நவீன காலத்தில் பார்த்து மகிழக்கூடிய ஆதிகால அரண்மனை இது ஒன்றே. வாழும் வரலாறு.
பேச்சிப்பாறை அணை
இந்த அணையின் பெயரை நீங்கள் அடிக்கடி செய்திகளில் கேள்விப்பட்டிருப்பீர்கள். பார்த்து பரவசம் கொள்ள வேண்டிய நீர்ப்பரப்பு. மிகச் சிறந்த பொழுது போக்குத் தலம். இங்கு படகுப் பயணம் சென்று மகிழலாம். கன்னியாகுமரியிலிருந்து 75 கி.மீ. தொலைவில் பேச்சிப்பாறை அணை நீரால் தளும்பிக் கொண்டிருக்கிறது.
பீர்முகமது தர்கா
இது பீர்முகம்மது ஒலியுல்லா தர்கா எனவும் அழைக்கப்படுகிறது. தென்காசியில் பிறந்து பீர்மேடு பகுதிக்குச் சென்று ஆன்மிகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட தத்துவ ஞானியான முகம்மது அப்பா எனப்படுகிற பீர்முகம்மது ஒலியுல்லா பல தத்துவ நூல்களை எழுதியுள்ளார். பத்மநாபபுரம் கருங்கல் கோட்டைக்கு இக்கவிஞர்கள்தான் அடிக்கல் நாட்டியதாகச் சொல்லப்படுகிறது. கேரள மக்களும் தமிழக மக்களும் சாதி மத பேதமின்றி கலந்து கொள்ளும் திருவிழா. ரஜாப் மாதத்தில் கொண்டாடப்படும் ஆண்டு விழா.
செய்குத்தம்பி பாவலர் நினைவாலயம்
நாகர்கோவில் அருகே கோட்டாறு வட்டாரத்தை சேர்ந்த இடலாக்குடி கிராமத்தை உங்களுக்குத் தெரியுமா? இங்குதான் செய்குத்தம்பி பாவலர் 31 ஜூலை 1874இல் பிறந்தார். 1907இல் சதாவதான நிகழ்ச்சியை நடத்திப் பலரின் பாராட்டையும் பெற்றார். இந்த அறிஞருக்கு மரியாதை செய்யும் விதத்தில் நினைவாலயம் ஒன்று 1987 செப்டம்பர் 26இல் திறந்து வைக்கப்பட்டது. இந்திய விடுதலைப் போரில் கலந்துகொண்ட இந்தப் பாவலரின் நினைவாலயம் பார்ப்பது நமக்குப் பெருமை.
சங்குத்துறை கடற்கரை
நகர மக்களின் பொழுது போக்கு இடமாகத் திகழும் இடம் சங்குத்துறை. பூங்கா, கடலோர இருக்கைகள், சுடுமண், கூரை குடில்கள் சுற்றுலாப் பயணிகளின் மனங்கவரும் வசதிகள். நாகர்கோயிலிலிருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கிறது இந்த அழகுமிகு கடற்கரை.
உபகார மாதா கோவில்
சூரிய உதயம், அஸ்தமனம் இவை மட்டுமல்ல குமரி, எவ்வளவோ அற்புதங்கள் இருக்கிறன்றன. பழமை வாய்ந்த தேவாலயங்களில் உபகார மாதா கோயிலும் ஒன்று. இதன் கோபுர உயரம் 153 அடி. இங்குள்ள தங்கச் சிலுவையின் உயரம் 8 அடி உயரமாகும். இந்த அன்னை உங்களுக்கு உபகாரம் செய்வார்.
சொத்தவிளை கடற்கரை
ஆழமற்ற தண்ணீரும் உயரமான மணற்குன்றுகளும் எங்கே பார்க்கமுடியும்? இளைப்பாற குடை போன்ற கூரைகள் தனி குடில்கள் உண்டு. எங்கே? கன்னியாகுமரியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் சொத்தவிளை கடற்கரைக்குச் செல்ல வேண்டும். இந்த மாவட்டத்தின் சிறந்த இயற்கைக் கடற்கரைகளில் இதுவும் ஒன்று. இப்பகுதி முழுவதையும் மேலிருந்து அழகாகக் காணும் வகையிலான காட்சிக் கோபுரம் சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. புதிய கடற்கரை சாலை வழியாக இங்கு நேராக வாகனத்தில் வரலாம். கடற்காற்றின் சுகத்தை அனுபவிக்கலாம்.
சுசீந்திரம்
ஊரெல்லாம் சுற்றி வந்தாலும் இசை எழுப்பும் தூண்களையும், பெண் விநாயகரையும் 18 அடி உயர அனுமன் சிலையையும் பார்த்திருக்க முடியாது. சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலுக்கு வராமல் இவையெல்லாம் சாத்தியமில்லை. விஷ்ணு, சிவன், பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயில் கலைத்திறன் மிக்கது. இதுவொரு கலைக் கருவூலம். கண்டு ரசித்தால் வளம் பெறலாம்.
புனித சேவியர் தேவாலயம்
புனித சவேரியார் கோவாவிலிருந்து தமிழகக் கடலோரப் பகுதிகளுக்கு இறைப்பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவ இறைப்பணியாளர். எப்போதும் அவர் கன்னியாகுமரி மாவட்டத்தின் கோட்டாறுக்கு வரத் தவறியதில்லை. அவர் கோட்டாறில் தங்கும் காலங்களில் புனித மேரி ஆலயம் சென்று வழிபடுவது வழக்கம். கோட்டாறு மக்கள் மத்தியில் வலிய பண்டாரம் என்றே அறியப்பட்டிருந்தார். வேணாட்டு மக்களான படகர்கள் படையெடுப்பு நிகழ்த்தியபோது அதைத் தடுத்து நிறுத்திய பெருமையில் மகிழ்ந்த மன்னர் பாராட்டிய கையோடு சவேரியாருடன் நெருங்கிப் பழகினார். இவரது பணியை அங்கீகரிக்கும் விதமாக கோட்டாறில் ஒரு கத்தோலிக்க தேவாலயம் கட்டிக் கொள்ள அனுமதி அளித்தார். இரண்டு முறைகளுக்கு மேல் புதுப்பிக்கப்பட்ட இந்தத் தேவாலயம் புனித சவேரியாரின் பெருந்தொண்டை உலகுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறது. இத்தேவாலய வளாகத்திற்குள் புனித அன்னை தேவாலயமும் உள்ளது.. மிகப்பழமையான தேவாலயத்தைக் கண்டு வருவதே பெரும்பேறு.
சுவாமி விவேகானந்தர் பாறை நினைவு மண்டபம்
சகோதர, சகோதரிகளே என்ற சொல்லில் உலகைக் கட்டிப் போட்டவர். எழுமின்!விழுமின்! என்ற வார்த்தைகளின் மூலம் இளைய மனங்களில் எழுச்சி தீபம் ஏற்றியவர். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தை நிறுவியவர். குமரிப் பாறையில் விவேகானந்தரின் சிலையும் நினைவு மண்டபமும் எழுப்பப்பட்டு உள்ளது. இங்கு அமைதி தவழும் தியான மண்டபம் இருக்கிறது. படகுகள் மூலம் பாறையை அடைவது ஒரு பரவச அனுபவம்.
தமிழன்னை பூங்கா
தமிழ் வாழ்வின் பெருமையை நிலைநிறுத்தும் பூங்கா. தமிழன்னைக்குத் தனியாக உருவாக்கப்பட்ட ஒரே பூங்கா. இங்கு புலியை முறத்தால் தடுத்த வீரப்பெண், முல்லைக் கொடி படர தேர் ஈந்த பாரி வள்ளல் சிலைகள் உள்ளன. தமிழ்ப் புலவர்களின் ஓவியங்களும் உண்டு. தமிழுக்கு அமுதென்று பேர்.
சூரிய விழிப்பும், துயிலும்
வங்கக் கடலோரம் உதயமும், மறைவும் ஒரே இடத்தில் காணக் கூடிய கண்கொள்ளாக் காட்சி. சூரிய உதயத்தை வருடம் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். சூரிய மறைவை ஜுன் ஜுலை ஆகஸ்ட் மாதங்கள் தவிர்த்து மற்ற மாதங்கள் முழுவதும் காணலாம். இதற்கென்று அமைக்கப்பட்ட கோபுரம் மூலம் இக்காட்சிகளை மிகச் சிறப்பாகக் காண முடியும். இது நமக்காக இயற்கை வரைந்த எழில் ஓவியம்.
தேங்காய்ப்பட்டினம் கடற்கரை
தென்னந்தோப்புகள் நிறைந்த கடற்கரை கிராமம். இது பழங்காலத்தில் வெளிநாடுகளுடன் குறிப்பாக அரேபியாவோடு வணிகத் தொடர்பு கொண்டிருந்தது. ஆற்றின் கழிமுகக் கரைகளில் தென்னந்தோப்புகள் சூழ அழகிய தாமிரபரணி இங்கு கடலில் சங்கமிக்கிறது. தென்னை மரங்கள் அணிவகுத்திருக்க இந்தக் காயலில் படகு சவாரி செய்யும் அனுபவம் தனிப்பரவசம். விளவங்கோடு வட்டம் பேயன்குளம் கிராம் அருகே மேற்குக் கடற்கரை சாலையில் தேங்காய்ப்பட்டினம் அமைந்துள்ளது. இந்தக் கடலோர கிராமத்தை கண்டுகளிக்க நாகர்கோவிலிருந்து 35 கி.மீ. பயணம் செய்ய வேண்டும்.
திற்பரப்பு அருவி
ஒரு பரந்து விரிந்த பார்வையைத் தரும் திற்பரப்பு, அழகும் புனிதமும் ஒன்று கூடிய இடம். இங்குள்ள புனித அருவியும் பச்சை மலையும் கோதையாறும் நம்மை வசீகரித்துக் கொள்ளும் அழகின் தொட்டில்கள் பளிச்சென மின்னி தெறித்து விழும் இந்த அருவி பார்வைக்கு விருந்தளிக்கிறது. தரையில் கொட்டும் அருவி தலையில் முட்டும்போது புத்துணர்ச்சி கிடைக்கும். நீராடி மகிழ திற்பரப்பு திகைப்பூட்டும் அனுபவம் தரும்.
விவேகானந்தபுரம்
விவேகானந்தா கேந்திராவின் தலைமையகம் விவேகானந்தபுரம் என்று அழைக்கப்படுகிறது. இளைஞர்களின் மனங்களில் தன்னம்பிக்கையை விதைத்த விவேகானந்தரின் வாழ்க்கையை விவரிக்கும் படங்களும் அவரது சிலையும் நிறுவப்பட்டுள்ளது. பயணிகள் தங்கிச் செல்ல வசதிகள் இங்குண்டு மாகடல் நீரிலிருந்து சூரியன் மேலெழும் பரந்து விரிந்த காட்சியை விவேகானந்தபுரம் கடற்கரையிலிருந்து பார்ப்பது அற்புதம்.
திருவள்ளுவர் சிலை
தமிழினம் செழிக்க இரண்டடி குறள் தந்த வள்ளுவருக்கு விவேகானந்தர் பாறையில் எழுப்பப்பட்டுள்ள 133 அடி உயரச் சிலை. இந்த உயரம் 133 அதிகாரங்களை நினைவுபடுத்துகிறது. நவீன கட்டடக் கலையின் அழகையும் திராவிடக் கலை நுட்பங்களையும் உள்ளடக்கி 5000க்கும் மேற்பட்ட சிற்பிகளின் உளியில் பிறந்த அற்புதம். டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் உருவாக்கப்பட்ட பிரமாண்ட நினைவுச் சின்னம். படகுகள் மூலம் சிலையினைப் பார்வையிடலாம்.
திருவட்டார்
கலைமிகு கோயில். கோயிற் கட்டடக் கலைக்குச் சிறந்த உதாரணம். சுவரோவியங்கள் நிறைந்த திருத்தலம். கன்னியாகுமரியிலிருந்து 70 கி.மீ. தொலைவில் திருவட்டார் உள்ளது.
உலக்கை அருவி
கோடையிலும் வற்றாத அருவி இது. தோவாளை வட்டம் அழகிய பாண்டியபுரத்தில் அமைந்துள்ள இயற்கை அற்புதம். இயற்கையின் பேரழகை ரசிக்கவும் அருவியில் நீராடி மகிழவும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அரசின் பாதுகாப்பிலுள்ள பாதை வழியாகச் சென்று அருவியை அடைய வேண்டும்.
உதயகிரி கோட்டை
தமிழகத்தின் பழமையான நினைவுச் சின்னம். மார்த்தாண்டவர்மன் ஆட்சி செய்த கால கட்டத்தில் (கி.பி. 1729 - 1758) கட்டப்பட்ட கோட்டை. இங்கு ஒரு துப்பாக்கி பட்டறையும் டச்சுக்காரரான தளபதி டிலானியின் கல்லறையும் இருக்கிறது. டச்சு தளபதி பற்றி ஒரு சுவாரசியமான கதை உண்டு. குளச்சலில் நடந்த போரில் சிறைப்பிடிக்கப்பட்ட கைதியான டச்சு தளபதி டிலானி மன்னன் மார்த்தாண்ட வர்மனின் நம்பிக்கையைப் பெற்று விசுவாசமான தளபதியாக உயர்ந்தான். அதுமட்டுமல்ல மார்த்தாண்ட அரச வீரர்களுக்கு ஐரோப்பிய போர் முறையைக் கற்றும் தந்தானாம். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையைப் பகல் நேரத்தில் மட்டுமே பயணிகள் பார்த்து களிக்க முடியும்.
வள்ளிமலை
முந்நூறு படிகள் ஏற சம்மதமா? அப்படியென்றால் குன்றின் மீது அமைந்த வள்ளிமலை கோயிலைத் தரிச்சிக்கலாம். ஒன்றின்மேல் ஒன்றாக மூன்று அடுக்குள் கொண்டது. விநாயகப் பெருமானும் காசி விசுவநாதரும் எழுந்தருளியுள்ள இக்கோயில் பல்லவர் மற்றும் நாயக்கர் கால கட்டடக் கலைப் பாணியில் அமைந்தது.
காட்சிக் கோபுரம் - தொலைநோக்ககம்
சமதளத்திலிருந்து கடலின் பிரமாண்டத்தையும், விவேகானந்தர் சிலை, வள்ளுவர் சிலையையும் பார்ப்பதில் அனுபவம் வேறுவிதம். ஆனால் காட்சிக் கோபுரத்தில் நின்றபடி தொலை நோக்கியில் பார்ப்பபது தனி ருசி. குமரிக் கடலின் அழகை சுற்றுப்புறக் காட்சிகளை இங்கின்றி வேறெங்கே பார்க்க போகிறீர்கள்?
வட்டக்கோட்டை
இதுவொரு கம்பீரமான கற்கோட்டை. குமரி முனையின் வடகிழக்கில் 6 கி.மீ. தொலைவில் இருக்கிறது. இக்கோட்டை தென் திருவிதாங்கூர் வரிசை என்று சொல்லப்படும் எல்லைக் காப்பரண் வரிசையில் வருகிறது. நாஞ்சில் நாட்டு பாதுகாப்பிற்காக மன்னன் மார்த்தாண்டவர்மன் கட்டினான். கோட்டையின் உட்புறத்தில் உறுதி வாய்ந்த உட்புறக் கட்டுக்கள் மன்னனின் டச்சுத் தளபதி டிலானியின் உத்தரவின் கீழ் கட்டப்பட்டவை. செங்கோண வடிவிலான இந்த வட்டக்கோட்டை மூன்று ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது. இதன் அழகை பிரமாண்டத்தைக் காண ஒருமுறை சென்று வாருங்கள். இனி வார்த்தைகள் போதும்.
விவேகானந்தரின் கண்காட்சி
ஆன்மிகத் தேடலின் போது நிகழ்ந்த சம்பவங்கள் பாரத் பராக்கிரமா என்ற பெயரில் சுடுமண் வடிவங்களால் சித்திரிக்கப்பட்டுள்ளன. இக் கண்காட்சியின் மேற்கூரை செங்கல்லால் நெட்டுக் கூம்பாக அமைக்கப்பட்டுள்ளது. கட்டட வடிவம் ஸ்ரீ சக்கர மேரு வடிவத்தில் விவேகானந்தர் உலகிற்கு ஒளியூட்ட உதவிய அவரது ஆத்ம சுடரை நினைவு கூர்கிறது. இந்தியாவை நேசிக்கும் அனைவரும் காண வேண்டிய கண்காட்சி. நாம் இதைப் பார்க்காமல் விட்டு வைக்கலாமா?
தெக்குறிச்சி கடற்கரை
ஓர் அமைதியான கடற்கரையைக் கொண்ட கடலோர குட்டி கிராமம் தெக்குறிச்சி. சவுக்கு மரங்களின் வரிசையில் கடலைப் பார்ப்பது கவின்மிகு அனுபவம். சுற்றிப் பார்க்க சிறந்த இடம் என்ற பெயர் சுற்றுலாப் பயணிகளிடம் உண்டு. மேற்குக் கடற்கரை சாலையில் உள்ளது.
திரிவேணி சங்கமம்
முக்கடல் சங்கமம், வங்கக் கடல், அரபிக் கடல், இந்துமாக் கடல் என முக்கூடலும் சங்கமிக்கும் புனித நீர்த்தலம். குமரிக்குச் செல்கிறவர்கள் சங்கமத்தை தரிசிக்காமல் திரும்பக் கூடாது.
வேலுத்தம்பி தளவாய் நினைவாலயம்
ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போர்புரிந்த மாவீரன் தளவாய் வேலுத்தம்பியின் நினைவாயலம் கல்குளம் வட்டத்திலுள்ள குக்கிராமமான தல்லாகுளம்தான். இந்த மாவீரன் பிறந்த தொட்டில்பூமி. இவரது வீட்டை ஆங்கிலேயர்கள் இடித்து விட்டார்கள். ஆனால் அவரது உடன் பிறந்தவர்கள் அந்த வீட்டைக் கட்டினர். இப்போது இவ்வீட்டில் தளவாய் வேலுத்தம்பி நினைவாக அவர் பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் கலைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரியிலிருந்து 30 கி.மீ. பயணித்தால் தல்லாகுளத்தை அடையலாம்.

Thursday, June 4, 2009

மலையாள குருவி

சோக கீதம்

கவிதைகள்

கைபேசிக் கவிதைகள்

சீவி சிங்காரித்த
செல்ல மகளை
அழைத்துச் செல்லும் அழகுடன்
அலங்கார குட்டிப் பைக்குள்
கைபேசி அடக்கி
கடந்து செல்கின்றனர் இளம் பெண்கள்.

*

நெரிசல் பயணங்களில்
ஏதோ ஓர்
செல்பேசிச் சிணுங்குகையில்
அனிச்சைச் செயலாய்
கைபேசி தொடுகின்றன
எல்லா கைகளும்

*
இரயில் பயணத்தில்
குறுஞ்செய்தி அனுப்பியும், வாசித்தும்
தனியே சிரிக்கும் பெண்கள்
அவ்வப்போது
அசடு வழிகின்றனர்.
நிலமை உணர்ந்து

*

அழைப்புகளின்றி
அமைதியாய் கிடக்கும் கைபேசியை
வேலை செய்கிறதா
என சோதித்துப் பார்க்கின்றன
சந்தேக விரல்கள்.

*
அலுவலக கணினி திரைகள்
நாட்டியமாடுகின்றன
ஓரமாய்
அதிர்ந்து சிணுங்கும்
கைபேசியில் அழைப்பில்.

*
நள்ளிரவு தாண்டிய
ஜாமத்தின் சன்னல்களிலும்
ஏதோ ஒர்
விழித்திருக்கும் காதல் கைபேசி
கிணுகிணுத்து
சேதி சொல்கிறது.

*
ஆயுத பூஜை நாளில்
நெற்றியில் மஞ்சள் பொட்டு சூடும்
விலையுயர்ந்த கைபேசியில்
ஸ்கீரின் சேவராய்
பிரிட்னி ஸ்பியர்ஸ்

*
அலுவலகத்தை
வீட்டின் சமையலறை வரையும்
வீட்டை
அலுவலகத்தின் இருக்கை வரையும்
நீட்டிக்கிறது
கைபேசி.

காதல் கவிதைகள்

நீ வந்து பேசுகையில்
பூக்களுக்கு வருத்தம்தான்.
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்
தேனீக்கள்!

*

இனி மொட்டைமாடியில் தூங்காதே.
போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
நிலா!

*

குறைகளோடு பிறக்கும்
எனது கவிதைகள் யாவும்
உன் முத்தம் வாங்கி
முழுமையடைகின்றன!

*

உன் வீட்டு ரோஜா மொட்டு
மலரவே இல்லையென குழம்பாதே.
மலர்தான் உன்னை முத்தமிட
எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது!

*

எழுத எழுத வெறுமையாகவே இருக்கிறது தாள்.
எழுதியதுமே தாளிடமிருந்து தப்பித்து
உன்னைச் சேரும்… காதல் கவிதைகள்!





The Great Kanyakumari

கன்னியாகுமரி மாவட்டம்



கன்னியாகுமரி மாவட்டம், (ஆங்கிலம்: Kanyakumari district) தமிழ் நாட்டின்மாவட்டங்களில் ஒன்று ஆகும். இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள இம்மாவட்டத்தின் தலைநகரம் நாகர்கோவில் ஆகும். இது தமிழகத்தின் மூன்றாவது வளர்ச்சியடைந்த மாவட்டமாகும். முப்பதொன்று

இயற்கை அழகுக்கு பெயர் போன இம்மாவட்டத்தில் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும்வரலாற்றுச் சின்னங்களும் அமைந்திருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு இது ஒரு சுவர்க்கமாக திகழ்கிறது. இம்மாவட்டத்தின் மேற்கு எல்லையாக கேரள மாநிலமும் வடக்கு மற்றும் கிழக்கு எல்லைகளாக தமிழகத்தின் நெல்லை மாவட்டமும் திகழ்கிறது. முந்தைய பல

2006 டிசம்பர் 26 அன்று தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கடற் பகுதிகளை கடுமையாகத் தாக்கிய சுனாமிப் பேரலை இம்மாவட்டத்தையும் பெரும் நாசத்துக்கு உள்ளாக்கியது.


மக்கள் வகைப்பாடு

2001 - வது ஆண்டின் கணக்கெடுப்பின் படி இம்மாவட்ட மொத்த மக்கள் தொகை 1,676,034 ஆகும். இதில் 65.27% நகர் புற மக்கள் தொகையாகும்.

வரலாறு

கன்னியாகுமாரி என்ற பெயர் இப்பகுதியில் புகழ்பெற்ற கன்னியாகுமரி அம்மன்பார்வதி தேவி தன்னுடைய ஒரு அவதாரத்தில் 'குமரிப் பகவதி' என்னும் பெயருடன் சிவனை சேரும் பொருட்டு இந்நிலப் பகுதியின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு பாறையில் தவம் செய்ததாக கூறுகிறது. என்னும் தேவதையை மையப்படுத்தும் தல புராணத்திலிருந்து இம்மாவட்டத்துக்கு கிடைத்திருக்கிறது. இது

இப்பகுதியில் பொதுவாக அழைக்கப்படும் 'நாஞ்சில் நாடு', 'இடை நாடு' ஆகிய பகுதிகளை இம்மாவட்டம் உள்ளடக்குகிறது. இப்பகுதியில் நிரம்ப வயல்கள் இருந்ததால், நிலத்தை (வயலை) உழ பயன்படும் நாஞ்சிலிலிருந்து (கலப்பை) இந்நிலப்பரப்புக்கு இப்பெயர் வந்தது என்பது பெயரியல் நிபுணர்கள் துணிபு. தற்போது அகஸ்தீஸ்வரம் மற்றும் தோவாளை வட்டங்களாக இருக்கும் நாஞ்சில் நாடு, பத்தாம் நூற்றாண்டின் முதற்பகுதி வரை பாண்டியர்களின்சேரர்கள் வசம் வந்ததாகத் தெரிகிறது.
ஆட்சிப்பகுதியாக இருந்து பின்

தற்போது கல்குளம், விளவங்கோடு வட்டங்களாக இருக்கும் இடை நாடு, சேரர்கள் ஆட்சிப்பகுதியாக இருந்தது. பின் ஓய்சலயர்கள் மற்றும் மேற்கு சாளுக்கியர்களின் வளர்ச்சியினால் சேரர்கள் வலுவிழந்தனர். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட (வேனாடு) திருவிதாங்கூர் மன்னர்கள் நாஞ்சில் நாட்டின் பெரும்பான்மைப் பகுதிகளை கைவசப்படுத்திக்கொண்டனர். வீர கேரள வர்மாவால் துவங்கப்பட்ட இக் கைப்பற்றுக்கொள்கை அவரின் பின்காமிகளால் பெரிதும் விரிவுபடுத்தப்பட்டு கி.பி.1115 -ஆம் ஆண்டு நிறைவுசெய்யப்பட்டது.

ஏறக்குறைய நான்கு நூற்றாண்டுகள் வேனாட்டை ஆண்டு வந்த வீர மன்னர்கள், தொடர்ந்து பக்கத்து பாண்டிய மன்னர்களுடன் எல்லைத் தகராறில் ஈடுபட்டு வந்ததால் விஜயநகர மன்னர்கள் இவர்களுக்கு எதிராக படையெடுத்தனர். இதன் விளைவாக கன்னியாகுமரி, 1609- ஆம் ஆண்டு மதுரை, விஸ்வநாத நாயக்கரின்ரவி வர்மா, மார்த்தாண்ட வர்மா, ஆகிய அரசர்களின் காலகட்டத்தில் வேனாடு கடும் உள்நாட்டு குழப்பங்களை சந்தித்தது. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஆற்காடு சந்தா சாகிபு நாஞ்சில் நாட்டை தாக்கினார். குளச்சல் போரில் மார்த்தாண்ட வர்மா டச்சு போர்வீரர்களை வெற்றிகொண்ட போதிலும் சந்தா சாகிபுவை சமாளிக்க முடியாததால் போர்களத்தை விட்டு பின்வாங்க வேண்டியிருந்தது. மார்த்தாண்ட வர்மாவுக்கு பிறகு வந்த மன்னர்கள் அனைவரும் வலுவற்றவர்களாக இருந்ததால் ஆங்கிலேயர்களின் தலையீடு இந்நாட்டின் மீது அவ்வப்போது இருந்து வந்து, பின் படிப்படியாக அவர்களின் முழு கட்டுப்பாட்டுக்கு வந்த வேனாட்டை 1947 வரை அவர்களே ஆண்டுவந்தனர். வலுவான கரங்களுக்குள்ளானது. இதன் விளைவாக 1634 வரை நாஞ்சில் நாட்டுக்கு எந்த விதமான வலுவான அச்சுறுத்தல்களும் இல்லாமல் இருந்தது. பின்னர்

பின் அது 1947 முதல் 1956 வரை திருவிதாங்கூர் மன்னரின் சுய ஆளுகைக்குள் இருந்தது. அதன் பிறகு 1956 - 1961 ஆகிய ஆண்டுகளுக்குள் அதன் ஆளுமை தமிழகத்தின் மற்ற மாவட்டங்களின் பாணியில் தமிழகத்துடன் இணைந்தது.

புவியியல்

இம்மாவட்டம், முன்பு நூற்றுக்கணக்கான நீர்நிலைகள் மற்றும் சிறந்த வாய்க்கால் விவசாயம் ஆகியவற்றின் மூலம் திருவிதாங்கூரின் களஞ்சியம்ரப்பர் மற்றும் நறுமணப்பொருள்கள் மலைச்சரிவுகளிலும் நெல், வாழை, தென்னை ஆகியன கடற்கரையை ஒட்டிய சமபூமிகளிலும்மேற்குத் தொடர்ச்சி மலைகளை நோக்கி மெதுவாக உயர்கிறது. இம்மாவட்டதிற்கு 62 கி.மீ மேற்குக் கடற்கரையும், 6 கி.மீ கிழக்கு கடற்கரையும் உள்ளன. இம்மாவட்டத்தின் நிலப்பகுதியில் 48.9% விவசாய நிலமாகவும், 32.5% அடர்ந்த காட்டுப் பகுதியாகவும் இருக்கிறது. என அறியப்பட்டது. பெருமளவில் காணப்படுகின்றன. இம்மாவட்டம் பொதுவாக மலை சார்ந்த பகுதிகளாகவும், கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் சமபூமியாகவும் காட்சியளிக்கிறது. நிலப்பரப்பின் உயரம் கடற்கரையிலிருந்து

மாவட்டத்தின் கடற்கரைகள் பல பாறை மயமாகவும் மற்றவிடங்கள் வெள்ளை மணற்பகுதியாகவும் காணப்படுகின்றன. கிழக்கு கடற்கரைகளில் பவழப்பாறைகளின் அம்சங்கள் (பெரும்பாலும் அழிந்திருந்தாலும்) பல காணப்படுகின்றன. பால வகையான வண்ண சங்கு வகைகளும் காணப்படுகின்றன. மேலும் சில கடற்கரைப் பகுதிகளில் காணப்படும் மணல் தாது வளம் நிறந்ததாக இருக்கிறது.

தட்பவெப்ப நிலை

கடந்த ஐம்பது ஆண்டு கால ஆய்வில், வடகிழக்கு பருவக்காற்று வீசும் அக்டோபர்டிசம்பர் மாதம் வரை, 24 மழை நாட்களில் 249 மி.மீ மழையும், தென்மேற்கு பருவக்காற்று வீசும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை 27 மழை நாட்களில் 537 மி.மீ. மழை பெய்திருக்கிறது. இதுவே மார்ச் முதல் மே மாதம் வரையிலான வேனில் காலத்தில் 11 மழை நாட்களில் 332 மி.மீ மழையும் பதிவாகி இருக்கிறது. மாவட்டத்தின் ஒரு ஆண்டு சராசரி மழை 1465 மி,மீ. இதில் அக்டோபர் மாத அளவான 247 மி.மீ அதிகபட்சமாகவும், பெப்ரவரி மாத அளவான 21 மி.மீ குறைந்தபட்சமாகவும் இருக்கிறது. மாவட்டத்தின் ஈரப்பதம் 60 முதல் 100 சதவிகிதமாக இருக்கிறது. மாதம் முதல்

ஆறுகள்

இம்மாவட்டத்தின் முக்கிய நதிகள் தாமிரபரணி, வள்ளியார், பாழார் ஆகியன.

தாவர மற்றும் விலங்கு வகைகள்

கீரிப்பாறை பகுதிகளில் பல வகைப்பட்ட பேரணிச் செடிகளையும் பல வெப்பமண்டல தாவர வகைகளையும் பார்க்க முடியும். பேச்சிப்பாறை பகுதிகளில் சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு இலைகளியும் பூக்களையும் உடைய மரங்கள், பச்சை படர்ந்த காட்டுப்பகுதிகளுக்கு மத்தியில் ஜொலிப்பதை பார்க்க முடியும்.

இம்மாவட்டத்தில் காணப்படும் விலங்குகளில் முள்ளம் பன்றி, காட்டுப் பன்றி, பல்லி வகைகள், பல இன கொக்கு, நாரை, நீர்க்கோழி, மலைப் பாம்பு, பல வகைப் பாம்புகள் உட்பட பல வகைப்பட்ட ஊர்வன ஆகியவை அடங்கும்.மேலும் மகேந்திரகிரி மலையில் (கடல் மட்டத்திலிருந்து 4000 அடி உயரத்துக்கு மேல்) முயல்கள், மான்கள், சிறுத்தை ஆகியவற்றை காண முடியும். அதன் அருகாமையிலுள்ள நெடுஞ்சாலையில் சிறுத்தை குட்டிகள் சாதாரணமாக வந்து போவதை பார்க்க முடியும். கீரிப்பாறை சார்ந்த பகுதிகள் யானைகள், காட்டு எருமை, கரடி போன்ற விலங்கினங்களின் உறைவிடமாகத் திகழ்கிறது. தேரூர் பகுதியில் பல வகையான கொக்குகளை சில குறிப்பிட்ட காலச் சூழல்களில் பார்க்க முடியும்.


மருத்துவ வரலாறு

மருந்துவாழ் மலையைக் காட்டும் செயற்கைக்கோள் புகைப்படம்

இம்மாவட்டத்துக்கு இயற்கை பல அரிய மூலிகை வகைகளையும் தாது வளங்களையும் தாங்கும் மலைகளையும் நன்கொடையாகத் தந்திருக்கிறது. கன்னியாகுமரிக்கு அருகாமையில் அமைந்திருக்கும் மருந்துவாழ் மலைஅசோகர் காலகட்டத்தில் வாழ்ந்த புத்த பிக்ஷூக்களினால் மருத்துவ மற்றும் ஆன்மீக பாரம்பரியம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இம்மலை இராமருக்கும் இராவணனுக்கும் இடையில் நடந்த காப்பிய யுத்தத்தின் போது, அனுமன் சுமந்து சென்ற Gandha Madhana மலையின் உடைந்து விழுந்த பகுதியாக இதன் புராணாக் குறிப்பு கூறுகிறது. இம்மலையில் பல அரிய வகை மூலிகைகள் அதிக அளவில் உள்ளன.

மேலும் செந்தமிழின் முதல் இலக்கண ஆசிரியரும், முதல் சித்தருமானஅகத்தியர் இந்நிலப்பரப்பின் எல்லையில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இப்பகுதியில் அகஸ்தீஸ்வரம் என்னும் ஊரும் உள்ளது. இவ்வூருக்கும் இப்பெயர் ஒரு குறு முனிவரிடமிருந்து வந்ததாக நம்பப்படுகிறது. இவ்வூரில் அகஸ்தீஸ்வரால், அகஸ்தீஸ்வரமுடையாருக்கு சமர்ப்பிக்கப்பட்டதாக நம்பப்படும் ஒரு கோயிலுமுள்ளது. மருத்துவம், இலக்கணம் மட்டுமல்லாமல் வர்ம சாஸ்திரத்திலும் அகத்தியர் திறம்படைத்தவராவார். பிரபல பனை ஓலை எழுத்தாக்கங்களான வர்மாணி, வர்ம சாஸ்திரம் ஆகியன அவரால் இயற்றப்பட்டவைகளாகும். இன்றும் இந்த வர்ம வைத்திய முறைகள் கன்னியாகுமரிப் பகுதிகளில் குரு-சிஷ்ய முறையில் கற்பிக்கப்படுகிறது. மேலும் இந்த தமிழ் வைத்திய முறையை பயன்படுத்தி இத்துறையில் வல்லுனர்களால் மருத்துவம் செய்யப்படுகிறது.

பண்பாடு

தமிழ், மலையாளம் ஆகிய மொழிகள் இம்மாவட்டத்தின் முக்கியமாக வழக்கத்திலுள்ளவை.

சமயம்

இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் கணிசமான சதவிகிதத்தில் உள்ளனர். மேலும் சில இஸ்லாமியப் பெரும்பான்மை மண்டலங்களும் இங்கு உண்டு. இம்மாவட்ட கிறிஸ்தவர்களின் சதவிகிதம், அவர்களின் தேசிய சதவிகிதத்தை விட அதிகம். மேலும், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில், குறிப்பாக தற்போது குமரி மாவட்டமாக உள்ள தென் திருவிதாங்கூரில் கிறிஸ்தவ பணிப்பரப்பாளர்கள்ஆங்கில கல்வியின் முன்னோடிகளாக திகழ்ந்தனர். இங்கு ஏற்பட்ட கல்வியறிவின் வளர்ச்சியாலும் இதர காரணங்களாலும் சாதி முறை பெருமளவில் வலுவிழந்து காணப்படுகிறது.

இம்மாவட்டத்தின் மக்கள் சாதி, மத இன, வேறுபாடுகளின்றி பழகுகின்றபொழுதும் இங்கு 1980 களில் இங்கு பெரிய அளவில் மதக்கலவரம் வெடித்தது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழாவின் போது இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் வெடித்த இக்கலவரம், பல்வேறு விதங்களில் பரவிய வதந்திகளின் காரணமாக பரவியதாகத் தெரிகிறது. இக்கலவரத்தில் ராஜாக்கமங்கலம், ஈத்தாமொழி, பிள்ளைத்தோப்பு, நாகர்கோவில் ஆகிய இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. கலவரத்தை அடக்கும் விதத்தில் நடந்த இந்தத் துப்பக்கிசூட்டில் பல பொது மக்களும் கொல்லப்பட்டனர்.

பொருளாதாரம்

தமிழ் நாட்டின் மொத்த ரப்பர் உற்பத்தியில் 95% கன்னியாகுமரி மாவட்டத்தில் உற்பத்தியாகிறது. காற்றாலைகளுக்கு மாவட்டத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு உண்டு. ஆரல்வாய்மொழி பகுதியில் இவை அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளன.

விவசாயம்

[தொகு] முக்கிய பயிர்வகைகள்

  1. அரிசி - 400 ச.கி.மீ
  2. தென்னை - 210 ச.கி.மீ
  3. ரப்பர் - 194.78 ச.கி.மீ
  4. மரவள்ளிக்கிழங்கு - 123.50 ச.கி.மீ
  5. வாழை - 50 ச.கி.மீ
  6. பருப்பு - 30 ச.கி.மீ
  7. முந்திரி - 20 ச.கி.மீ
  8. பனை - 16.31 ச.கி.மீ
  9. மாம்பழம் - 17.70 ச.கி.மீ
  10. புளி - 13.33 ச.கி.மீ
  11. கமுகு - 9.80 ச.கி.மீ
  12. பலா - 7.65 ச.கி.மீ
  13. கிராம்பு - 5.18 ச.கி.மீ

கைவினைப் பொருட்கள் மற்றும் குடிசைத் தொழில்

குமரி மாவட்டம் கைவினைப் பொருட்களுக்கு பெயர் போன மாவட்டமாகும். குறிப்பாக தோல் நீக்கப்படாத தேங்காயில் செய்யப்படும் குரங்கு பொம்மைகள், தேங்காய் ஓடு மற்றும் மரத்தால் செய்யப்படும் கைவினைப் பொருட்கள் ஆகியன முக்கியமானவை. மேலும் சங்கினாலான கைவினைப்பொருட்களும் சிறப்பு வாய்ந்தவை. தமிழகத்தின் மொத்த கயிறு உற்பத்தியில் 28.4 சதவிகிதமும் பாய் உற்பத்தியில் 61.5 சதவிகிதமும் இம்மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.

ரப்பர்

ரப்பர் உற்பத்தி இம்மாவட்டத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாவாட்டத்தின் மேற்குப்பகுதியில் கேரள இல்லையை ஒட்டிய பகுதிகளில் இவை அதிகமாக காணப்படுகின்றன. மேலும், நேந்திரம் பழம், செந்துளுவன், ரசகதளி, பாளயம்கொட்டான், துளுவம், மட்டி, உட்பட பல வகையான வாழைப்பழங்கள் இங்கு பயிரிடப்படுகின்றன. இவை மட்டுமல்லாமல், பலாப்பழம் (வரிக்கில மற்றும் கூளன்), மாம்பழம் (அல்போன்சா, பங்களோரா, நீலம், மற்றும் ஒட்டு) தேங்காய் ஆகியன இம்மாவட்டத்தின் விவசாய வளத்துக்கு பெருமை சேர்க்கின்றன. இவை தவிர ரோஜா, ஜெவ்வந்தி, உட்பட பல மலர்களும் இங்கே பயிரிடப்படுகின்றன.

மீன் பிடிப்பு

கன்னியாகுமரி கடல் பகுதிகளில் 200 - க்கும் மேற்பட்ட இன மீன்கள் கிடைக்கின்றன.

கல்வி

கல்வியறிவு விகிதத்தில் (100%) குமரி மாவட்டம் தமிழகத்தில் முதலிடம் வகிக்கிறது. மேலும் கல்வித்தரத்திலும் முதலிடம் வகிக்கிறது.

கல்லூரிகள்

  1. அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் - 12
  2. சுயநிதி கல்லூரிகள் - 4
  3. Colleges for special education -8
  4. தொழில் கல்லூரிகள் - 20

குமரி மாவட்டத்திலுள்ள பள்ளிகள்

  1. மழலையர் பள்ளிகள் - 83
  2. ஆரம்ப பாடசாலைகள் - 413
  3. நடுநிலைப் பள்ளிகள் - 147
  4. உயர் நிலைப் பள்ளிகள் - 121
  5. மேல் நிலைப் பள்ளிகள் - 120
  6. மொத்தம் 884

சுற்றுலா தலங்கள்


ஆதாரங்கள்

Wikipedia